விடுதலை நாளேட்டில் சுமார் 30 ஆண்டுகாலமாக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றிய திரு. ஆர். ராதா அவர்கள் நேற்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிக்க வருத்தமும், துயரமும் அடைந்தேன்.
பத்திரிகை துறையில் பெரியாருடைய சமூகநீதி கொள்கைகளை தொடர்ந்து பரப்புகின்ற வகையில் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். பத்திரிகை நண்பர்களின் குடும்பங்களில் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதனை முன்னின்று செய்கின்ற சேவை மனப்பான்மை கொண்டவராக விளங்கியவர் திரு. ஆர். ராதா அவர்கள்.
அவருடைய இழப்பு பத்திரிகைத்துறை நண்பர்கள் மட்டுமல்ல, பெரியாரின் தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும். திரு. ஆர். ராதா அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் துயரத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்

No comments:
Post a Comment