ஊழல் குற்றச்சாட்டு – 24 : இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழல் - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

ஊழல் குற்றச்சாட்டு – 24 : இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழல்


அரசு தொழிலாளர் காப்பீட்டுக் கழக மருத்துவமனை தொடங்கப்பட்டு 63 ஆண்டுகள் ஆகிறது. தொழிலாளர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மருத்துவ வசதிகள் செய்துதருவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள். சமீபத்தில் மத்திய பா.ஜ.க. அரசு, இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளை நடத்துவதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்தது. இதை எதிர்த்து இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதோடு, இதைத் தமிழக அரசு ஏற்று நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதற்குரிய நிதியை மத்திய அரசு தரவேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். 

இந்தப் பின்னணியில் தமிழக சுகாதார துறை அமைச்சர் எடுத்த முயற்சியின் அடிப்படையில், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முதலாண்டு மாணவர்கள் 200 பேரும், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 100 பேரும் தலா ரூ.3 லட்சம் வசூல்செய்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Pages