தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 61 லட்சம் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்றன. 33,973 ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்தக் கடைகளுக்குப் பொது விநியோகத் துறை மூலமாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படுகின்றன. நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படவேண்டிய அரிசி கடத்தப்படுவது குறித்து அதிர்ச்சியூட்டும் செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றன.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசியில் 15 சதவிகிதத்துக்கும் கூடுதலாகக் கடத்தப்படுகிறது என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாகும். இதை தேசிய மாதிரி கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் உறுதிபடுத்துகின்றன. 2011&12ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.32 லட்சம் டன் அரிசியில், 31.56 லட்சம் டன் அரிசி மட்டும்தான் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்றும், மீதியுள்ள 3.76 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.610 கோடி எனவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் அரிசி மானியத்திற்கான ரூ.3,200 கோடியில் சுமார் 19 சதவிகிதம் அளவுக்குக் கடத்தல் நடைபெற்றிருக் கிறது. இதை ஒரு பெரிய ஊழலாகவே கருதவேண்டியிருக்கிறது. இதற்குத் தமிழக அரசு அதிகாரிகள் பல்வேறு சால்ஜாப்புகளைக் கூறி மூடிமறைக்க முயற்சித்தாலும் ஊழலை மறைத்துவிட முடியாது.
தமிழகத்தில் மொத்தம் 33,973 நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றில் 20ஆம் தேதிக்குப்பிறகு எந்த நியாய விலைக் கடைக்குச் சென்றாலும் அரிசி வழங்கப்படுவது கிடையாது. இதில் பல்வேறு தவறுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால், அரிசி கடத்தல் மூலம் ரூ.1,280 கோடியும் பருப்பு மற்றும் பாமாயில் கடத்தல் மூலம் அரசுக்கு ரூ.697 கோடியும் இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், நியாய விலைக் கடை பொருள்கள் கடத்தப்படுவதன்மூலம் அரசுக்கு ஓராண்டுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1,977 கோடி. இந்த அடிப்படையில் கடந்த நான்காண்டுகளில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.7,908 கோடி.
கடந்த 60 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்காக இந்தியாவிலேயே மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் பொது விநியோக துறையைச் சீரழித்து, லஞ்ச வேட்டைக்கு உட்படுத்திய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்மீது உரிய விசாரணை நடத்தப்பட்டால்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

No comments:
Post a Comment