தூத்துக்குடி மாவட்ட தி.மு. கழகத்தின் மாவட்ட செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வந்த திரு. என். பெரியசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
டாக்டர் கலைஞர் அவர்களால் முரட்டு பக்தன் என்று அழைக்கப்பட்;ட தூத்துக்குடி மாவட்டத்தில் வலிமைமிக்க தூணாக நின்று திராவிட முன்னேற்ற கழகத்தை காத்து வளர்த்தவர் திரு. பெரியசாமி, எல்லோரிடத்திலும் மிகுந்த அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர். திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான சகோதரர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்தவர். தொண்டர்களுக்கு துணை நின்றவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்து தொகுதி மற்றும் மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபட்டவர்.
திரு. பெரியசாமி அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் மிகுந்த துயரத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:
Post a Comment