சினிமா பாடலாசிரியரும், தமிழக அரசின் முன்னாள் அரசவை கவிஞருமான, கலைமாமணி திரு. நா. காமராசன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
கவிஞர் நா. காமராசன் அவர்கள் சுமார் 600க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர். எழுத்துலகில் தனக்கென தனியொரு பாதை அமைத்து பல புது கவிதைகள் எழுதியவர். இவரது புதுக் கவிதைகளால் அனைவரின் மனதையும் வென்றவர். புது கவிதைகளால் பல விருதுகளைப் பெற்றவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசவையில் அரசவை கவிஞராக சிறப்பாக பணியாற்றியவர். பழகுவதற்கு இனியவர். எளிமையானவர். இவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:
Post a Comment