ஊழல் குற்றச்சாட்டு – 10 : ஊழலால் ரத்து செய்யப்பட்ட உடன்குடி மின் திட்டம் - INCTamilNadu

Recent

Thursday, July 5, 2018

ஊழல் குற்றச்சாட்டு – 10 : ஊழலால் ரத்து செய்யப்பட்ட உடன்குடி மின் திட்டம்


உடன்குடி மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கப் போவதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா 24.02.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டதோடு, அதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டு & அதற்குப்பின் ஆறுமாத காலத்திற்குள் திறக்கப்படவேண்டிய விலைப்புள்ளி அவ்வாறு திறக்கப்படாமல், காலம் தாழ்ந்து 2014ஆம் ஆண்டு நவம்பரில் திறக்கப்பட்டது. ஆனால், நான்கு மாதங்கள் கழித்து அந்த டெண்டரையே ரத்துசெய்து மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு வெளியிட்டார். விரைவில் உடன்குடி முதல் அலகுக்கான புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு இறுதிசெய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.அலகு 1 மற்றும் அலகு 2 சேர்ந்து 1,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய உடன்குடியில், தமிழக மின்சார வாரியமும் ஙிபிணிலி நிறுவனமும் ரூ.8,362 கோடி மதிப்பீட்டில் திட்டம் தொடங்க முடிவானது. உடன்குடி பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தையும் தமிழக அரசு தொடங்கியது. 

இந்நிலையில், 2012இல் இத்திட்டத்தைத் தமிழக அரசே தனித்து நிறைவேற்றும் என ஜெயலலிதா அறிவித்தார். 2013 ஏப்ரலில் டெண்டர்கள் கோரப்பட்டன. 18 மாதங்கள் கழித்து 2014 அக்டோபரில் டெண்டர்கள் திறக்கப்பட்டபோது, ஙிபிணிலி நிறுவனமும், ‘சைனிஸ் கன்சார்ட்டியம்’ என்ற சீன நிறுவனமும் இறுதிக் கட்டத்துக்கு முன்னேறின. ஆனால், டெண்டர் இறுதிசெய்யப்படவில்லை. அதன்பின் ஆறு மாதங்கள் கடந்த நிலையில், உடன்குடி மின் உற்பத்தித் திட்டம் கைவிடப்படுவதாக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அண்மையில் அறிவித்தார். ஒப்பந்தப்புள்ளிகளில் குறைகள் இருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. அதை ஆறு மாதங்கள் கழித்து ஏன் தெரிவிக்கவேண்டும் என்ற கேள்விக்கு உரிய பதில் இல்லை.

இந்நிலையில், ‘சைனீஸ் கன்சார்ட்டியம்’ இதுதொடர்பாகக் கடந்த மார்ச் 23 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது. இதற்கு நீதியரசர் சிவஞானம், டெண்டரை ரத்து செய்ததற்கான ஆவணங்களை 26ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஙிபிணிலி, சைனீஸ் கன்சார்ட்டியம் போன்ற நிறுவனங்கள்மீது தவறான குற்றங்களைச் சுமத்தி, குறிப்பிட்ட கன்சல்ட்டிங் நிறுவனத்திடம் பரிந்துரையைப் பெற்று, அதனடிப்படையில் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் முன்னாள் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ஞானதேசிகன் செயல்பட்டுள்ளார்.

உடன்குடி மின் உற்பத்தித் திட்டம் முடக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம், எதிர்பார்த்த பேரம் படியவில்லை என்பதுதான். அதை மூடிமறைக்க இவ்வளவு தகிடுதத்தங்களை மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திட்டமிட்டு அறங்கேற்றியிருக்கிறார். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டால் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவரும்.

No comments:

Post a Comment

Pages