கோவை மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் இன்று அதிகாலை வீசப்பட்டுள்ளது. கட்சியின் பெயர் பலகை, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ள இத்தாக்குதலை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ள மதவாத சக்தி, தீவிரவாத அமைப்பு எதுவாயினும் அதை கண்டறிந்து காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சமீபகாலமாக அதிகமாக மோசமடைந்து வருவதையே இதுபோன்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், மதவாத சக்திகளின் இதுபோன்ற வன்முறைகளை தடுக்கவும், தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் விரைந்து செயல்பட வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:
Post a Comment